மீனவர் பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க இந்தியா கோரிக்கை

மீனவர் பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க இந்தியா கோரிக்கை

மீனவர் பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க இந்தியா கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

07 Apr, 2014 | 8:45 pm

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பிலான இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தையை இம்மாத இறுதியில் நடத்துமாறு கடற்றொழில் அமைச்சிடம், இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஏற்கனவே, இரண்டு தடவைகள் பிற்போடப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தையை இம்மாதம் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நடத்துமாறு இந்திய உயர்ஸ்தானிகராலயம் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சின் ஊடகச் செயலாளர் நரேந்திர ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான திகதி இதுவரை உறுதிசெய்யப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

அமைச்சினால் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் காரணமாக மே மாதமளவில் இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு கடற்றொழில் அமைச்சு உத்தேசித்துள்ளது.

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைகள் தொடர்பான இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை கடந்த மாதம் நடைபெறவிருந்தது.

எனினும், தமிழக மீனவர்களின் கைது விவகாரத்தினால் ஏற்பட்ட சர்ச்சையால் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாதிருப்பதற்கு தமிழக அதிகாரிகள் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்