ஜெனிவா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத இந்தியாவிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

ஜெனிவா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத இந்தியாவிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

ஜெனிவா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத இந்தியாவிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Apr, 2014 | 8:37 pm

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உட்பட 5 நாடுகள் முன்வைத்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா கலந்துக்கொள்ளாமை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது நன்றியை கடிதம் ஒன்றின் மூலம் பிரதமர் மன் மோகன் சிங்கிற்கு தெரிவித்துள்ளதாக, “த டைம்ஸ் ஒப் இந்தியா” செய்தி வெளியிட்டுள்ளது.

உள்ளக அரசியல் அழுத்தங்கள் காணப்பட்ட போதிலும், இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காது, வாக்களிப்பில் இந்தியா நடுநிலைமை வகித்ததாக “த டைம்ஸ் ஒப் இந்தியா” ​தெரிவித்துள்ளது.

இவ்வாறு வாக்களிப்பில் கலந்துகொள்ளாமைக்கான தீர்மானம் ஊடாக இலங்கையில் அதிகார பகிர்வு தொடர்பிலான கொள்கையில் நிலையான ஒரு தீர்மானத்தை இந்தியாவினால் எடுக்க முடியும் என  இந்திய அதிகாரிகளை மேற்கோள் காட்டி “த டைம்ஸ் ஒப் இந்தியா” ​தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்