குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களின் பணிப்பகிஷ்கரிப்பு ஆறாவது நாளாக தொடர்கிறது

குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களின் பணிப்பகிஷ்கரிப்பு ஆறாவது நாளாக தொடர்கிறது

குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களின் பணிப்பகிஷ்கரிப்பு ஆறாவது நாளாக தொடர்கிறது

எழுத்தாளர் Staff Writer

07 Apr, 2014 | 9:34 am

நாடளாவிய ரீதியில் குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் ஆரம்பித்துள்ள பணி பகிஷ்கரிப்பு இன்று ஆறாவது நாளாகவும் தொடர்கின்றது.

தாதியருக்கு மகப்பேற்று பயிற்சியளிக்கும் நடவடிக்கைக்கு எதிராகவே இந்த பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகிறது.

தமது கோரிக்கை தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தாதுள்ளதால் தொழிற் சங்க நடவடிக்கைகயை கடுமையாக்கவுள்ளதாக அரச குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

இந்த பணி பகிஷ்கரிப்பினால் கர்பிணித் தாய்மார் மற்றும் சிறுவர்களுக்கான சிகிச்சை நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன

சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மற்றும் கர்பிணித்தாய்மாருக்கான ஆலோசனை சேவைகள் சீர்குலைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் கூறுகின்றனர்

எவ்வாறாயினும் தாதியருக்கு மகப்பேற்று பயிற்சியளிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை கைவிடப்போவதில்லை என சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்