இலங்கை ரசிகர்களுக்கு நன்றி – சங்கக்கார

இலங்கை ரசிகர்களுக்கு நன்றி – சங்கக்கார

எழுத்தாளர் Staff Writer

07 Apr, 2014 | 1:21 pm

இலங்கை அணியை முன்னோக்கி கொண்டு செல்லும் இயலுமையை புதிய வீரர்கள் நிரூபித்துள்ளதாக முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்கார தெரிவிக்கின்றார்.

உலகக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவை வெற்றி கொண்டதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் ​தெரிவித்தார்.

குமார் சங்கக்கார தெரிவித்த கருத்து :-

[quote]blog_நான் மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளேன். பெருமையாகவுள்ளது. இவ்வாறான அணியொன்றில் இடம்பெற்றுள்ளமை  பாக்கியம் என கருகிறேன். அதுபோன்று இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த கிடைத்தமையும் எனது பாக்கியமாகும். எமது வீரர்கள் இந்த தொடரில் சிறப்பாக செயற்பட்டனர். இளம் வீரர்கள் மிகவும் சிறப்பாக செயற்பட்டார்கள். நான் அவர்களுக்கு நன்றிகளை தெரிவிக்கின்றேன். இலங்கை ரசிகர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.  அவர்களின் உதவியின்றி இந்த வெற்றியை பெற்றிருக்க முடியாது. நான் இல்லாவிட்டாலும், மஹேல இல்லாவிட்டாலும் அணியை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என இளம் வீரர்கள் நிரூபித்துள்ளனர்[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்