இருபதுக்கு-20 தோல்வி; ஆத்திரமுற்ற இரசிகர்கள் யுவராஜ் சிங்கின் வீட்டின் மீது கல்வீச்சு

இருபதுக்கு-20 தோல்வி; ஆத்திரமுற்ற இரசிகர்கள் யுவராஜ் சிங்கின் வீட்டின் மீது கல்வீச்சு

இருபதுக்கு-20 தோல்வி; ஆத்திரமுற்ற இரசிகர்கள் யுவராஜ் சிங்கின் வீட்டின் மீது கல்வீச்சு

எழுத்தாளர் Staff Writer

07 Apr, 2014 | 11:01 am

நேற்று நடைபெற்ற இருபதுக்கு-20  கிரிகெட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து ஆத்திரமுற்ற இந்திய இரசிகர்கள் யுவராஜ் சிங்கின் வீட்டின் மீது கற்களை வீசியுள்ளனர்.

யுவராஜ் சிங்கின் சண்டிகர்ரில் உள்ள வீட்டின் மீதே இவ்வாறு கல்வீச்சு இடம்பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற உலக இருபதிற்கு இருபது இறுதிப் போட்டியில் யுவராஜ் சிங் பிரகாசிக்க தவறியமையை அடுத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

21 பந்து வீச்சுக்களை எதிர்கொண்ட யுவராஜ் சிங் 11 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டமை இலங்கை அணிக்கு சாதகமாக அமைந்திருந்தமை இரசிகர்கள் ஆத்திரமுற காரணமாக அமைந்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்