இந்திய அணியின் தோல்விக்கு யுவராஜ் சிங் மாத்திரம் காரணமல்ல – யோக்ராஜ் சிங்

இந்திய அணியின் தோல்விக்கு யுவராஜ் சிங் மாத்திரம் காரணமல்ல – யோக்ராஜ் சிங்

இந்திய அணியின் தோல்விக்கு யுவராஜ் சிங் மாத்திரம் காரணமல்ல – யோக்ராஜ் சிங்

எழுத்தாளர் Staff Writer

07 Apr, 2014 | 2:59 pm

இருபதுக்கு-20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி இழந்தமைக்கு யுவராஜ் சிங் மாத்திரம் காரணமல்லவென அவரது தந்தை யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

போட்டியில் தோல்வியடைந்தமைக்கான பொறுப்பு முழு அணியையும் சாரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யுவராஜ் சிங்கினை மாத்திரம் விமர்சிப்பது சரியில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற இருபதுக்கு-20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி அதிக ஓட்டங்களை பெற்றுக்கொள்ளும் என எதிர்பாக்கப்பட்டது, எனினும் 130 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டது.

யுவராஜ் சிங் 21 பந்துகளில் 11 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இதனையே இந்திய அணியின் தோல்விக்கு காரணமென ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டன.

இந்த நிலையில், போட்டி முடிவடைந்து சிறிது நேரத்தில் சண்டீகரில் உள்ள கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் வீட்டின் மீது ரசிகர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அவரது வீட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே யோக்ராஜ் சிங் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்