மூன்றாவது முறையாக சாம்பியனானது அவுஸ்திரேலியா

மூன்றாவது முறையாக சாம்பியனானது அவுஸ்திரேலியா

மூன்றாவது முறையாக சாம்பியனானது அவுஸ்திரேலியா

எழுத்தாளர் Staff Writer

06 Apr, 2014 | 5:26 pm

மகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை அவுஸ்திரேலிய மகளிர் அணி சுவீகரித்துக் கொண்டது.

இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக, உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணியாக அவுஸ்திரேலிய மகளிர் அணி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

இங்கிலாந்து மகளிர் அணியுடனான இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

டாக்காவில் நடைபெற்ற இந்த போட்டியில் 106 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 29 பந்துகள் மீதமிருக்க 106 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கை அடைந்தது.

அவுஸ்திரேலிய துடுப்பாட்டத்தில் மெக் லானின் 44 ஓட்டங்களையும், இலிஸி பெரி 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 105 ஓட்டங்களை பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பாக ஹெதர் நைட் 29 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார், அவுஸ்திரேலிய அணியின் சரா கொயட் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

போட்டியின் நாயகியாக சரா கொயட் தெரிவானதோடு, தொடரின் நாயகியாக இங்கிலாந்து அணியின் ஆன்யா ஸ்ருப்சோல் தெரிவானார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்