பாகிஸ்தானின் இராணுவ தளபதி இலங்கை விஜயம்

பாகிஸ்தானின் இராணுவ தளபதி இலங்கை விஜயம்

பாகிஸ்தானின் இராணுவ தளபதி இலங்கை விஜயம்

எழுத்தாளர் Staff Writer

06 Apr, 2014 | 2:26 pm

பாகிஸ்தானின் கூட்டு இராணுவத் தளபதி ஜெனரால் ரஷாட் மஹ்மூத் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

பாகிஸ்தான் கூட்டு இராணுவத் தளபதியின் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

நாளை வருகை தரவுள்ள பாகிஸ்தானின் கூட்டு இராணுவத் தளபதி, எதிர்வரும் 11 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் எனவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதிக்குள் , ஜனாதிபதி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து அவர் கலந்துரையாடவுள்ளார்.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளிற்கும் பாகிஸ்தானின் கூட்டு இராணுவத் தளபதி விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்