தேர்தலின் போது வழங்கிய உறுதி மொழியை நிறைவேற்ற செயற்படுவதாக மரிக்கார் தெரிவிப்பு

தேர்தலின் போது வழங்கிய உறுதி மொழியை நிறைவேற்ற செயற்படுவதாக மரிக்கார் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Apr, 2014 | 7:00 pm

தேர்தலின் போது மத்திய கொழும்பு மக்களுக்கு வழங்கிய உறுதி மொழியை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவிக்கின்றார்.

மருதானைக்கு சென்றிருந்த போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

[quote] மத்திய கொழும்பில் உள்ளவர்களின் தொழில் பிரச்சினை, வீட்டு பிரச்சினை, வீடு உடைக்கும் பிரச்சினை உள்ளிட்டவற்றுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்காக, தேர்தலின் போது எவ்வாறு நெருங்கி செயற்பட்டோமா அதனை போன்று மத்திய கொழும்பு மக்களுடன் இணைந்து இவ்வாறான போராட்டத்தை ஆரம்பிக்கும் எதிர்பார்ப்புடன் இன்று இங்கு வந்துள்ளோம். எனவே இப்பகுதியில் உள்ள அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு, மத்திய கொழும்பு முழுவதிலும் இந்த போராட்டம் வெற்றி காணும் வரை கொண்டுச்செல்லவே எதிர்பார்க்கின்றோம். [/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்