துன்னான மோதல் சம்பவம்; விசாரணைகள் ஆரம்பம்

துன்னான மோதல் சம்பவம்; விசாரணைகள் ஆரம்பம்

துன்னான மோதல் சம்பவம்; விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

06 Apr, 2014 | 12:49 pm

ஹங்வெல்ல துன்னான பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த மோதல் சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக ஆணைக்குழுவின் சட்ட செயலாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

துன்னான பகுதியில் இடம்பெற்ற மோதலினை தொடர்ந்து பிரதேச மக்களின் இயல்பு வாழ்கைக்கு பாதிப்பு ஏற்ப்ட்டுள்ளதாக ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் அனைத்து தரப்பினரையும் வரவழைத்து உரிய விசாரணைகளை மேற்கொண்டு நிலைமையை முற்றாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் சட்ட செயலாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்