திருக்கோவிலில் துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டவர் கைது

திருக்கோவிலில் துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டவர் கைது

திருக்கோவிலில் துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டவர் கைது

எழுத்தாளர் Staff Writer

06 Apr, 2014 | 12:16 pm

திருக்கோவில் விநாயகப்புரத்தில் உள்ளூர் துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூர் துப்பாக்கி தயாரிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட உதிரிப்பாகங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

திருக்கோவில் பாலக்குடா பகுதியை சேர்ந்த 48 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை பொத்துவில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்