திருகோணமலையில் கைக்குண்டு மீட்பு

திருகோணமலையில் கைக்குண்டு மீட்பு

திருகோணமலையில் கைக்குண்டு மீட்பு

எழுத்தாளர் Staff Writer

06 Apr, 2014 | 11:22 am

திருகோணமலை திருக்கடலூர் பகுதியில் வீடொன்றின் பின்புறதிலிருந்து கைக் குண்டொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று மாலை 006.30 அளவில் கைக் குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக்ப பிரிவு தெரிவித்துள்ளது.

திருகோணமலை நீதிமன்ற உத்தரவிற்கமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கண்டெடுக்கப்பட்ட கைக் குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் அண்மைக் காலமாக கைக் குண்டுகள் இடைக்கிடை கண்டெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்