தங்கம் கடத்திய மூன்று பெண்கள் கைது

தங்கம் கடத்திய மூன்று பெண்கள் கைது

தங்கம் கடத்திய மூன்று பெண்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

06 Apr, 2014 | 7:04 pm

சட்டவிரோதமாக தங்கத்தை வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்ல முயற்சித்த மூன்று பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து பகுதி அளவில் தயாரிக்கப்பட்ட 21 தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்க பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி 39,40,000 ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்