சோனியா காந்தி தேசத் துரோகம் இழைத்துள்ளார் – ராம் ஜெத்மலானி

சோனியா காந்தி தேசத் துரோகம் இழைத்துள்ளார் – ராம் ஜெத்மலானி

சோனியா காந்தி தேசத் துரோகம் இழைத்துள்ளார் – ராம் ஜெத்மலானி

எழுத்தாளர் Staff Writer

06 Apr, 2014 | 6:31 pm

ஆளும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தேசத் துரோகம் இழைத்துள்ளதாக இந்தியாவின் சிரேஷ்ட சட்டத்தரணி ராம்ஜெத்மலானி குற்றஞ்சாட்டியுள்ளார்.

வந்தே மாதரம் பாடலுக்கு எதிராக செயற்பட்டவரை சந்தித்தன் மூலம் அவர் இந்த குற்றத்தை செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோவை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போதே ராம்ஜெத்மலானி இந்த கருத்தினை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஊழல் பாரிய அளவில் காணப்படுவதாகவும், பொருளாதார சீரழிவை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளதாக இந்தியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்தியாவின் 90 இலட்சம் கோடியை சுவீடன் ஜேர்மனி உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் சிலர் பதுக்கி வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவற்றை மீண்டும் நாட்டிற்குள் கொண்டுவந்தால் மக்கள் வரிசெலுத்த வேண்டிய நிலைமை ஏற்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளதால் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கம் அதனை மீட்பதில் ஆர்வம் காட்டவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்