சீன கப்பலுக்கு கிடைத்த சமிக்ஞை, மாயமான விமானத்தினுடையதா?

சீன கப்பலுக்கு கிடைத்த சமிக்ஞை, மாயமான விமானத்தினுடையதா?

சீன கப்பலுக்கு கிடைத்த சமிக்ஞை, மாயமான விமானத்தினுடையதா?

எழுத்தாளர் Staff Writer

06 Apr, 2014 | 6:26 pm

சீன கப்பலுக்கு கிடைக்கப்பெற்றுள்ள காணாமல் போன மலேசிய விமானத்தினுடையது என கருதப்படும் சமிக்ஞையானது மிக முக்கியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சமிக்ஞை தேடுதல் நடவடிக்கைகைளில் மிக முக்கியமானதும் ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்துள்ளதாகவும் அவுஸ்ரேலியாவின் தேடுதல் பணிகளுக்கான ஒருங்கணைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

எனினும் இந்த சமிக்ஞை காணாமல் போன விமானத்தினுடையதா? என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை தேடுதல் பணிகளுக்கான அவுஸ்திரேலியாவின் ஒய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டுள்ளார்

சமிஞ்ஞை வெளிவரும் பகுதிக்கு விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு அவுஸ்திரேலியா விமானங்களை அந்த பகுதிக்கு அனுப்பியுள்ளது.

இந்த சமிக்ஞை விமானத்தை தேடும் பணிகளில் திரும்புமுனையாக அமையலாம் என அவுஸ்திரேலியப் பிரதமர் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்