கடந்த காலங்களில் பிரகாசித்ததை வைத்து இன்றைய போட்டியை கணிப்பிட முடியாது -தோனி

கடந்த காலங்களில் பிரகாசித்ததை வைத்து இன்றைய போட்டியை கணிப்பிட முடியாது -தோனி

கடந்த காலங்களில் பிரகாசித்ததை வைத்து இன்றைய போட்டியை கணிப்பிட முடியாது -தோனி

எழுத்தாளர் Staff Writer

06 Apr, 2014 | 1:13 pm

கடந்த காலங்களில் பிரகாசித்ததை வைத்து உலக இருபதுக்கு- 20 கிரிக்கெட் தொடரின் இன்றைய இறுதிப் போட்டியை கணிப்பிட முடியாது என இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

குறித்த நாளில் எவ்வாறு விளையாடுகிறோம் மற்றும் நிலைமையை பொறுத்து தனிநபராக எவ்வாறு பங்களிப்பு செய்கிறோம் என்பதிலேயே இன்றைய போட்டி தங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டிகள் மாத்திரமல்லாது இந்தியன் பிறிமியர் லீக் மற்றும் சாம்பியன்ஸ் லீக் என பல்வேறு இறுதிப் போட்டிகளில் மஹேந்திர சிங் தோனி விளையாடியுள்ள அனுபவம் இந்திய அணிக்கு கைகொடுக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இலங்கை அணி சிறந்த ஒன்றெனக் கூறியுள்ள மஹேந்திர சிங் தோனி சிறந்த அனுபவம் மிக்க வீரர்களும் இளையவர்களும் அந்த அணியில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்