இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி, சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படுமா?

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி, சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படுமா?

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி, சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படுமா?

எழுத்தாளர் Staff Writer

06 Apr, 2014 | 5:48 pm

உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான இறுதிப் போட்டியில் இந்திய மற்றும் இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் பங்களாதேஷ், டாக்காவில் நிலவும் சீரற்ற காலநிலையால் போட்டிக்கு பாதிப்பு ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியினை குறித்த நேரத்திற்கு ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்படலாம் எனவும், இதனால் ஓவர்களை குறைத்து போட்டியினை நடத்த வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் கிரிக்கெட் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை சீரற்ற காலநிலை தொடருமாயின் போட்டி வேறு ஒரு தினத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்