இலங்கை அதிகார பகிர்வு செயற்பாட்டில் துரித முன்னேற்றத்தை அடைய வேண்டும் – வை.கே.சிங்ஹா

இலங்கை அதிகார பகிர்வு செயற்பாட்டில் துரித முன்னேற்றத்தை அடைய வேண்டும் – வை.கே.சிங்ஹா

இலங்கை அதிகார பகிர்வு செயற்பாட்டில் துரித முன்னேற்றத்தை அடைய வேண்டும் – வை.கே.சிங்ஹா

எழுத்தாளர் Staff Writer

06 Apr, 2014 | 9:47 pm

அதிகரித்து வரும் சர்வதேச அழுத்தங்களிருந்து விடுபடுவதற்கு, இலங்கை அதிகார பகிர்வு செயற்பாட்டில் துரித முன்னேற்றத்தை அடைய வேண்டும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா கூறியுள்ளார்

கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டதாக தி ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும்  இடையிலான பேச்சுவார்த்தை  மிக விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டியது முக்கயமானது என, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தாணிகரை மேற்கோள்காட்டி தி ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.

இதற்கான சூழலை இலங்கை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய உயர் மட்டத்தில் பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச ஊடகவியலாளர்களுடனான  சந்திப்பின் போது இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வொன்றுக்கு விரைவில் செல்ல வேண்டிய அவசியம் தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் , இதற்காக இலங்கை தலைமைத்துவம் வகிக்க வேண்டும் என்பதனை கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மீனவர் பிரச்சினையை தீர்பதற்காக மனித உரிமைகள் பேரவையில் வாக்களிப்பில் கலந்துக் கொள்ளாமளிருக்க இந்தியா எடுத்த தீர்மானம் காரணமாக அமைந்ததா என இதன் போது ஊடகவியலாளர்கள் இந்திய உயர் ஸ்தாணிகரிடம் கேள்வி எழுப்பினர்

இரு தரப்பிற்கும் அழுத்தம் கொடுக்க வேண்டிய தேவை இந்தியாவிற்கு இல்லை எனவும் அரசியல் செயற்பாட்டினை மீள  ஆரம்பிப்பதே இந்தியாவின் நோக்கம் எனவும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.

ஜெனிவா அமர்வின் பின்னர் இந்திய மீனவர்களை விடுதலை செய்ய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மேற்கொண்ட தீர்மானத்திற்கு இந்திய உயர் ஸ்தாணிகர் நன்றி தெரிவித்ததாக தி ஹிந்து குறிப்பிட்டுள்ளது.

இந்திய மத்திய அரசின் வெளிவிவகார கொள்கைகளுக்கு  தமிழக அரசினால் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் இதன் போது ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இந்திய வெளிவிவகார கொள்கைகள் மக்களின் அபிலாஷைகளுக்கு அமைவாக தீர்மானிக்கப்படும் விடயமென இந்திய உயர்ஸ்தானிகர் பதிலளித்துள்ளார்.

எவ்வாறாயினும் இறுதி தீர்மானங்கள் இந்தியாவின் தேசிய முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டே மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்ததாக தி ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்