இருபதுக்கு-20 உலகக் கிண்ண சாதனை துளிகள் (விபரங்கள் இணைப்பு)

இருபதுக்கு-20 உலகக் கிண்ண சாதனை துளிகள் (விபரங்கள் இணைப்பு)

இருபதுக்கு-20 உலகக் கிண்ண சாதனை துளிகள் (விபரங்கள் இணைப்பு)

எழுத்தாளர் Staff Writer

06 Apr, 2014 | 10:20 am

இருபதுக்கு-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2007ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இப்போது நடைபெறுவது 5 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியாகும்.

இதற்கு முன்னர் 4 உலகக் கிண்ணத்தை முறையே இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள் ஆகிய அணிகள் வெற்றிக்கொண்டுள்ளன.

இருபதுக்கு-20 உலகக் கிண்ணத்தில் அதிக போட்டிகளில் தலைவராக இருந்தவர் என்ற பெருமை தோனிக்கு உரியது.

India-New-Zeala10394

இதுவரை 26 போட்டிகளில் அவர் தலைவராக வழிநடத்தியுள்ளார். இதில் 16 போட்டிகளில் அவர் இந்திய அணிக்கு வெற்றி பெற்றுள்ளது.

தோனிக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து அணியின் தலைவர் கோலிங்வுட் அதிகபோட்டிக்கு தலைமை வகித்துள்ளார். அவர் 17 போட்டிகளில் தலைவராக இருந்து 8 வெற்றிகளை பெற்றுத்தந்துள்ளார்.

இருபதுக்கு-20 உலகக் கிண்ண போட்டியில் அதிக ஓட்டங்கள், அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற பெருமையை இலங்கை வீரர்கள் பெற்றுள்ளனர்.

இலங்கை வீரர் ஜெயவர்த்தன இப்போது 4ஆவது உலகக் கிண்ண போட்டியில் விளையாடி வருகிறார். இதுவரை 30 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 992 ஓட்டங்கள் பெற்றுள்ளார். இதுவே ஒரு வீரர் உலக கிண்ண போட்டியில் அதிக ஓட்டமாகும். இதில் ஒரு சதம், 6 அரைசதங்கள் அடங்கின்றது. அவரின் 39.68 சராசரி கதியை பெற்றுள்ளார்.

jayawardene-mahela-ap_630

இதற்கு அடுத்தபடியாக மேற்கிந்தியத்தீவுகளின் கிறிஸ் கெயில் 23 போட்டிகளில் பங்கேற்று 807 ஓட்டங்களை பெற்றுள்ளார் இதில் 1 சதம், 7 அரைசதங்கள் அடங்கும். அவரது சராசரி 40.35 ஆகும்

அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இலங்கையின் லசித் மலிங்க முதலிடத்தில் உள்ளார். 30 போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் 38 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Lasith-Malinga-Wicket-Takers-In-T20-Cricket

அவருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயித் அஜ்மல் உள்ளார். 23 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர் 36 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இருபதுக்கு-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஒரு அணிக்கு எதிராக அதிக ஓட்டங்களை பெற்ற அணி என்ற பெறுமையும் இலங்கை வசமே உள்ளது 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக கிண்ண போட்டி தொடரில் கெண்யா அணிக்கு எதிரான போட்டில் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ஓட்டங்களை பெற்று இந்த சாதனையை படைத்தது.

உலக கிண்ண தொடரில் குறைந்த ஓட்டங்களுக்கு ஒரு அணியை வீழ்திய சாதனையும் இலங்கை வசம் உள்ளது இந்த வருடம் இடம்பெறும் உலக கிண்ண தொடரில் தான் இந்த சாதனையை நிலைநாட்டப்பட்டது. நெதர்லாந்து அணி10.3 ஓவர்களில் 39 ரன்களுக்கு சகல விக்கெட்டுக்களை இழந்தது.

10003459_296449303839912_1074232532_n

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்