இந்திய மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியே வெற்றி பெறும் -கருத்துக் கணிப்பு

இந்திய மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியே வெற்றி பெறும் -கருத்துக் கணிப்பு

இந்திய மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியே வெற்றி பெறும் -கருத்துக் கணிப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Apr, 2014 | 2:07 pm

இந்திய மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றிபெறலாம் என முன்னணி செய்தி நிறுவனங்கள் நடத்தியுள்ள கருத்துக்கணிப்புக்கள் தெரிவித்துள்ளன.

இதன்மூலம் 10 ஆண்டு கால காங்கிரஸ் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வரும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

எதிர்கட்சி பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 38 வீத வாக்குகளைப் பெறும் என கருத்துக்கணிப்புபொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மற்றுமொரு செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் பாரதீய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 32.9 வீத வாக்குகளைப் பெறும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

பாரதீய ஜனதா கட்சி வெற்றி இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைகளில் தாக்கல் செலுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தாம் இந்த தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடான எல்லைப் பிரச்சினையில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவுள்ளதாக மோடியின் கட்சி வேட்பாளர்கள் கூறியுள்ளனர்.

கட்டம் கட்டமாக நடைபெறவுள்ள இந்திய மக்களவைத் தேர்தல் மே மாதம் 12 ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன் மே 16 ஆம் திகதி தேர்தல் முடிவு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்