அரசியல் அமைப்பை மாற்றி 6 வருடங்கள் ஆட்சியிலிருக்க வேண்டிய அவசியமில்லை – சந்திரிக்கா

அரசியல் அமைப்பை மாற்றி 6 வருடங்கள் ஆட்சியிலிருக்க வேண்டிய அவசியமில்லை – சந்திரிக்கா

எழுத்தாளர் Staff Writer

06 Apr, 2014 | 8:00 pm

நாட்டில் நேர்மையான நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காக பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவிக்கின்றார்

அம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டார்.

அதிகாரத்தின் மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய பணத்திற்கு பேராசை பிடித்தவர் தான் அல்லவெனவும், அதனால் தான் ஆட்சியிலிருந்து செல்லும் போது மிகவும் ஏழ்மையாகவே சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

[quote]எனது பெற்றோரிடம் இருந்து கிடைத்த காணிகளை விற்றுத்தான் தற்போது நான் வாழ்க்கையை கொண்டு செல்கிறேன். அரசியல் அமைப்பை மாற்றி அமைத்துக்கொண்டு 5 அல்லது 6 வருடங்கள் ஆட்சியில் இருக்கவோ அல்லது சாகும் வரை பதவியில் இருக்கவோ வேண்டியதில்லை. நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டபோது இருதடவைகளுக்கு மேல் பதவியில் இருக்க போவதில்லை. எனது பிள்ளைகளுக்கு உறுதி மொழியளித்தேன். அதற்கு பின்னர் நான் வீட்டில் ஓய்வாக இருப்பதாக கூறினேன். ஆனால் தாங்கள் இன்னும் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகவில்லை எனவே நீங்கள் விரும்பினால் அரசியல் அமைப்பை மாற்றி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என கட்சி எனக்கு தகவல் அனுப்பியது. அதற்கு ஒருபோதும் நான் விரும்பவில்லை என அவர்களுக்கு நான் தெரிவித்தேன். எனது பெற்றோர்கள் ஜனநாயகத்திற்கு எவ்வாறு மதிப்பளிக்க வேண்டும் என கற்றுக் கொடுத்துள்ளனர். அதன் பின்னர் நான் வீட்டிற்கு ஓய்வுக்காக சென்று விட்டேன். ஆனால் தற்போது அதனை மாற்றிவிட்டார்கள். நான் விரும்பினால் தற்போதைய அரசியலமைப்பின்படி மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக மீண்டும் வரமுடியும். ஆனால் அவ்வாறானதொரு தேவை எனக்கில்லை. விதி எவ்வாறு சுற்றுகின்றது என்பதை காண்கின்றோம்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்