வாழைச்சேனையில் கைக்குண்டுகள் மீட்பு

வாழைச்சேனையில் கைக்குண்டுகள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2014 | 7:15 pm

மட்டக்களப்பு வாழைச்சேனை கோராவளி பகுதியில் 4 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

கோரவளி கோவில் வீதியில் உள்ள வீடொன்றில் கழிவறை குழி வெட்டப்பட்டபோது நேற்று மாலை கைக் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிஸார், இராணுவத்தினருடன் இணைந்து கைக் குண்டுகளை மீட்டுள்ளனர்.

நீதவானின் உத்தரவிற்கமைய மீட்கப்பட்ட கைக்குண்டுகள் இன்று செயழிலக்கச் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்