மாகாண சபைகளுக்கு தெரிவான ஐ.தே.க உறுப்பினர்கள் பதவிப் பிரமானம்

மாகாண சபைகளுக்கு தெரிவான ஐ.தே.க உறுப்பினர்கள் பதவிப் பிரமானம்

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2014 | 7:01 pm

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கு தெரிவான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இன்று பதவிப் பிரமானம் செய்துள்ளனர்.

இந்த பதவிப் பிரமான நிகழ்வு பிட்டகோட்டேயில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வை அடுத்து மேல் மற்றும் தென் மாகாண சபைகளின் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஆகியோருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைய மேல் மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவராக மஞ்சு ஸ்ரீ அரங்கல நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டதுடன் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக ஹர்ஷன ராஜகருணா நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

தென் மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவராக தென்னகோன் நிலமே நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் மாகாண சபை எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக பந்துல லால் பண்டாரிகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் பந்துல லால் பண்டாரிகொட பங்கேற்கவில்லை.

பின்னர் சிறிகொத்தாவுக்கு சென்ற அவர் தமக்குரிய நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்