புத்தளம், வவுனியாவில் சடலங்கள் கண்டுபிடிப்பு

புத்தளம், வவுனியாவில் சடலங்கள் கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2014 | 7:21 pm

மாவத்தகம வவுனியா, மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளிலிருந்து நான்கு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மாவத்தகமையிலுள்ள வீடொன்றுக்குள் இருந்து இரண்டு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

கிடைத்த தகவலுக்கு அமைய இன்று பிற்பகல் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த இரண்டு சடலங்களும் தம்பதியருடையதென விசாரணைகளில் தெரியவபந்துள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாவத்தகம பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது

இதேவேளை, வுவனியா – மன்னார் வீதியிலும் இன்று காலை 5.45 அளவில் பொலிஸாரால் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியிலுள்ள பஸ் தரிப்பிடம் ஒன்றினுள் இருந்து சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.

இதனிடையே, புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்களவெளி பகுதியில் பொலிஸாரால் ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்