புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2014 | 3:48 pm

புத்தளம் மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து இன்றிரவு 9.30 முதல் நாளை மாலை 4.30 வரை மட்டுப்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

சீதுவையில் இருந்து கட்டுநாயக்க வரையான ரயில் மார்க்கத்தில் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதே இதற்குக் காரணம் என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பிட்ட காலப்பகுதியினுள் கொழும்பு கோட்டையில் இருந்து ஜாஎல வரையிலும், நீர்கொழும்பில் இருந்து சிலாபம் வரையிலும் மாத்திரமே ரயில் போக்குவரத்து இடம்பெறவுள்ளது.

சீதுவை – கட்டுநாயக்க ரயில் மார்க்கம் இரட்டை ரயில் மார்க்கமாக புனரமைக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, இன்று முற்பகல் 9 மணிமுதல் 39 மணித்தியாலத்திற்கு பேஸ்லைன் ரயில் கடவை மூடப்படும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

பேஸ்லைன் ரயில் கடவையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது,

இந்த காலப்பகுதிக்குள் மாற்று வழியாக பேஸ்லைன் மேம்பாலத்தை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளை பொலிஸார் கேட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்