பாவனைக்கு உதவாத 80 தொன் பெரிய வெங்காயம் கண்டுபிடிப்பு

பாவனைக்கு உதவாத 80 தொன் பெரிய வெங்காயம் கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2014 | 7:33 pm

பாவனைக்கு உதவாத 80 தொன் பெரிய வெங்காயம் வெலிசர பொருளாதார மத்திய நிலைய களஞ்சியசாலையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட பெரிய வெங்காயத்தின் பெறுமதி 60 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் கம்பஹா மாவட்ட பொறுப்பதிகாரி ரஞ்சித் வீரவர்தன குறிப்பிட்டார்.

இரண்டு கொள்கலன்களில் இருந்தே பாவனைக்கு உதவாத பெரிய வெங்காயம் கண்பிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்க்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

தொலைபேசியூடாக கிடைக்கபெற்ற தகவலின் அடிப்படையிலேயே இந்த சுற்றிவைளப்பு மேற்கொள்ளப்பட்டுளளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்