குருநாகல் – அநுராதபுரம் எல்ல வீதியில் வாகன விபத்து; 26 பேர் காயம்

குருநாகல் – அநுராதபுரம் எல்ல வீதியில் வாகன விபத்து; 26 பேர் காயம்

குருநாகல் – அநுராதபுரம் எல்ல வீதியில் வாகன விபத்து; 26 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2014 | 8:05 pm

குருநாகல் – அநுராதபுரம் எல்ல வீதியின் பாதெணிய பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.

பாதெனிய திகிதவ பகுதியில் பயணிகள் பஸ்சுடன் லொறி மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த 26 பேர் , வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 24 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளமை குறித்து தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்