பண்டிகைக்காலத்தில் கொழும்பு உள்ளிட்ட மேலும் சில பகுதிகளில் விசேட பாதுகாப்பு

பண்டிகைக்காலத்தில் கொழும்பு உள்ளிட்ட மேலும் சில பகுதிகளில் விசேட பாதுகாப்பு

பண்டிகைக்காலத்தில் கொழும்பு உள்ளிட்ட மேலும் சில பகுதிகளில் விசேட பாதுகாப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2014 | 2:54 pm

பண்டிகைக்காலத்தில் கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சீருடையிலும், சிவில் உடையிலும் பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்.

இதுதவிர மதுபோதையில் வாகனம் செலுத்துகின்ற சாரதிகளை கைது செய்வதற்கான 24 மணித்தியால நடவடிக்கைகளை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பண்டிகைக்கால கொள்வனவுகளின் போது பெண்கள் குறிப்பாக தங்களின் தங்காபரணங்கள் மற்றும் பணம் உள்ளிட்ட உடைமைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் பொலிஸார் அறிவுரை வழங்கியுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் பணக் கொடுக்கல் வாங்கல்களின்போது போலி நாணயத்தாள்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்துமாறும் பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்