நான்கு மில்லியன் மரக்கன்றுகளை நடுவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை

நான்கு மில்லியன் மரக்கன்றுகளை நடுவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை

நான்கு மில்லியன் மரக்கன்றுகளை நடுவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2014 | 3:25 pm

பாடசாலை மாணவர்களின் பங்களிப்புடன் பயன்தரக்கூடிய நான்கு மில்லியன் மரக்கன்றுகளை நடுவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சுபகாரியமாக இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிடுகின்றது.

இதன்பொருட்டு நாட்டிலுள்ள சகல பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு பயன்தரக்கூடிய மரக் கன்றுகளை பகிர்ந்தளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவிக்கின்றது.

சூழல் பாதிப்புகளால் நாளாந்தம் ஏற்படுகின்ற காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதால், அத்தகைய நிலைமைகளை தவிர்ப்பதற்காகவும், தேசிய உற்பத்திக்கு பங்களிப்பு செய்வதற்காகவும் பயன்தரக்கூடிய மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டிருப்பதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சுற்றாடல் பாதுகாப்பு, சூழல் அலங்காரம் ஆகியவற்றிற்கு பங்களிப்பினை வழங்குதல், பாடசாலை மாணவர்களை மர நடுகைக்காக ஊக்குவித்தல், பாடசாலைகளுக்கும், சமூகத்திற்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்துதல், பயன்தரக்கூடிய மர நடுகையின் மூலம் பொருளாதார நன்மைகளை பெற்றுக்கொள்ளல் போன்ற பல்வேறு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த மர நடுகைத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்