கைது செய்யப்பட்டவர் திடீர் மரணம்; விசாரணைகள் ஆரம்பம்

கைது செய்யப்பட்டவர் திடீர் மரணம்; விசாரணைகள் ஆரம்பம்

கைது செய்யப்பட்டவர் திடீர் மரணம்; விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2014 | 6:14 pm

அநுராதபுரம் நகரில் பொலிஸாரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட ஒருவர் திடீர் மரணம் அடைந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மதுபோதையில் இருந்த இரண்டு பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது அவர்களில் ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதன்போது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் சந்தர்ப்பத்தில் அந்த நபர் உயிரிழந்துள்ளார்.

45 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைகள் அநுராதபுரம் வைத்தியசாலையில் இன்று இடம்பெறவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்