தெற்கு அதிவேக வீதியூடாக  கடுவெல – கொக்கல வரை சொகுசு பஸ் சேவை ஆரம்பம்

தெற்கு அதிவேக வீதியூடாக கடுவெல – கொக்கல வரை சொகுசு பஸ் சேவை ஆரம்பம்

தெற்கு அதிவேக வீதியூடாக கடுவெல – கொக்கல வரை சொகுசு பஸ் சேவை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2014 | 10:41 am

இலங்கைப் போக்குவரத்து சபையினால் பயணிகளின் வசதிகருதி, தெற்கு அதிவேக வீதியூடாக கடுவெல முதல் கொக்கல வரை சொகுசு பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்பொருட்டு ஆறு சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கை அத்தியட்சகர் எச்.எம். சந்திரசிறி தெரிவித்தார்.

கடுவெலயில் இருந்து கொக்கல வரையான பயணத்திற்கு பயணி ஒருவரிடம் 450 ரூபா அறவிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

20 நிமிடங்களுக்கு ஒரு தடவை என்ற கால அட்டவணையின் பிரகாரம் சொகுசு பஸ் சேவை முன்னெடுக்கப்படுவதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கை அத்தியட்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்