எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள்

எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள்

எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள்

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2014 | 9:56 am

தமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன்பொருட்டு மேலதிக பஸ்கள் மற்றும் ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து அமைச்சுகள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை விசேட தூர சேவை தனியார் பஸ்களை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 16 ஆம் திகதி வரை கொழும்பில் இருந்து சொந்த இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்கின்றவர்களின் வசதிகருதி 24 மணித்தியாலமும் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

அத்துடன் பண்டிகைக்காலம் முடிவடைந்து மீண்டும் கொழும்பு திரும்புவதற்கும் 15 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்