இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா

இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா

இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2014 | 9:18 am

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியைத் தழுவாத அணித்தலைவர் என்ற பெருமையை மஹேந்திர சிங் தோனி தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

உலக இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் மஹேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி 6 விக்கட்டுக்களால் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

மிர்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் தென்னாபிரிக்கா நிர்ணயித்திருந்த 173 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை , இந்திய அணி 19.1 ஓவரிலேயே கடந்தது.

போட்டியின் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய அணி வீரர் அஜின்கயா ரஹானே மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் முதல் 10 ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தனர்.

அதன் பின்னர் களமிறங்கிய விராட் கோஹ்லி சர்வதேச இருபதுக்கு-20 போட்டியில் தனது 7 ஆவது அரைச்சதத்தை கடந்து 72 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்ளை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது.

அணித்தலைவர் பிளஸிஸ் பெற்ற 58 ஓட்டங்களே அணி சார்பில் பெற்றுக் கொண்ட அதிக பட்ச ஓட்டங்களாகும்.

பந்துவீச்சில் இந்திய அணியின் ரவிச்சந்தரன் அஷ்வின் 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

இதற்கமைய நாளை நடைபெறவுள்ள உலக இருபதுக்கு-20 தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை சந்திக்கின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்