ஆப்கானிஸ்தானில் இன்று ஜனாதிபதித் தேர்தல்

ஆப்கானிஸ்தானில் இன்று ஜனாதிபதித் தேர்தல்

ஆப்கானிஸ்தானில் இன்று ஜனாதிபதித் தேர்தல்

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2014 | 9:29 am

தலிபான்கள் நிலைகொண்டுள்ள ஆப்கானிஸ்தானில் இன்று ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவள்ளது.

நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட 8 பேர் இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

2001 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் மறுசீரமைப்பு கொண்டுவரப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது தேர்தல் இதுவென்பதால் இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில், தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் தலிபான்கள் ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாடு முழுவதும் சுமார் 4 இலட்சம் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும் நேற்றைய தினம் இரண்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் அடையாளந்தெரியாத நபரினால் சுட்டிக்கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பாதுகாப்பு கருதி பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் நாடுகளின் எல்லைப்பகுதிகள் மூடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்