ஆண்டு சிறந்த வீரருக்கான ஆசிய விருதை தோனி வென்றுள்ளார்

ஆண்டு சிறந்த வீரருக்கான ஆசிய விருதை தோனி வென்றுள்ளார்

ஆண்டு சிறந்த வீரருக்கான ஆசிய விருதை தோனி வென்றுள்ளார்

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2014 | 4:51 pm

இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனி 2014 ஆம் ஆண்டு சிறந்த வீரருக்கான ஆசிய விருதை வென்றுள்ளார்.

2014 ஆம் ஆண்டில் தமது துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கான விருது வழங்கும் விழா பிரித்தானியாவில் நடைபெற்றது.

இதன்போதே பங்களாதேஷுக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய அணித்தலைவருக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ராம்பிரகாஷ் விருதை வழங்கியுள்ளார்.

பங்களாதேஷில் நடைபெற்று வரும் உலக இருபதுக்கு- 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி அங்கு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த விருது கிடைத்தமை முன்னிட்டு மகிழ்ச்சி வெளியிட்டுள்ள தோனி , அதனை தமது ரசிகர்களுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்