யாழில் இராணுவத்தினரால் குடும்ப விபரங்கள்  சேகரிப்பு

யாழில் இராணுவத்தினரால் குடும்ப விபரங்கள் சேகரிப்பு

யாழில் இராணுவத்தினரால் குடும்ப விபரங்கள் சேகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Apr, 2014 | 1:13 pm

யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளில் இராணுவத்தினரால் குடும்ப விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சங்கானை, சித்தங்கேணி மற்றும் வட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் நேற்று முந்தினம் தொடக்கம் குடும்ப விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாக எமது யாழ் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அடிப்படை வசதிகள் உள்ளிட்ட குடும்ப தகவல்களை திரட்டுவதறடகான சுமார் 42 வினாக்கள் அடங்கிய வினாக் கொத்து மூலம் இராணுவத்தினரால் பொது மக்களின் விபரங்கள் பூர்த்தி செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர்  ருவன் வணிகசூரியவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

மக்கள் நலன்கருதி அவர்களுக்கான சேவைகளை வழங்குவதற்கும், இராணுவத்தினரால் மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டங்களுக்காவும் மாத்திரமே தகவல்கள் திரட்டப்படுவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும், பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் தலைமறைவாகியிருப்பதாக இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், அவர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய நியூஸ்பெஸ்ட்டுக்கு குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்