மெத்தியூஸ், திரிமான்ன நிதானமான ஆட்டம்; வெற்றி இலக்கு 161

மெத்தியூஸ், திரிமான்ன நிதானமான ஆட்டம்; வெற்றி இலக்கு 161

மெத்தியூஸ், திரிமான்ன நிதானமான ஆட்டம்; வெற்றி இலக்கு 161

எழுத்தாளர் Staff Writer

03 Apr, 2014 | 8:02 pm

உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முதலாவது அணியை தெரிவு செய்வதற்கான அரையிறுதிப் போட்டியில் இலங்கை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 161 என்ற வெற்றியிலக்கை நிர்ணயித்துள்ளது.

டாக்காவில் நடைபெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இலங்கை துடுப்பாட்டத்தில் அஞ்சலோ மெத்யூஸ் 40 ஓட்டங்களையும், லஹிரு திரிமான்ன 44 ஓட்டங்களையும், டில்ஷான் 39 ஓட்டங்களையும் மற்றும் குசால் ஜனித் பெரேரா 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சில் க்ரிஷ்மர் சன்டோகி இரு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்