இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இலங்கை

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இலங்கை

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இலங்கை

எழுத்தாளர் Staff Writer

03 Apr, 2014 | 9:59 pm

உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரில் மூன்றாவது தடவையாக இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் டக்வேர்த் லூவிஸ் விதிமுறையில் 27 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

மிர்பூரில் நடைபெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்களைப் பெற்றுக்காண்டது.

இலங்கை துடுப்பாட்டத்தில் அஞ்சலோ மெத்யூஸ் 40 ஓட்டங்களையும், லஹிரு திரிமான்ன 44 ஓட்டங்களையும், டில்ஷான் 39 ஓட்டங்களையும் மற்றும் குசால் ஜனித் பெரேரா 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சில் க்ரிஷ்மர் சன்டோகி இரு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

வெற்றி இலக்கான 161 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 13.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 80 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது போட்டி மழை காரணமாக தடைப்பட்டு வெற்றி டக்வேர்த் லூவிஸ் விதிமுறை பிரகாரம் தீர்மானிக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்