மனைவியை விவாகரத்து செய்தார் விளாடிமிர் புடின்;  ஜிம்னாஸ்டிக் வீராங்கனையை மணக்கவுள்ளார்?

மனைவியை விவாகரத்து செய்தார் விளாடிமிர் புடின்; ஜிம்னாஸ்டிக் வீராங்கனையை மணக்கவுள்ளார்?

மனைவியை விவாகரத்து செய்தார் விளாடிமிர் புடின்; ஜிம்னாஸ்டிக் வீராங்கனையை மணக்கவுள்ளார்?

எழுத்தாளர் Bella Dalima

03 Apr, 2014 | 4:10 pm

தன்னுடன் 30 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பம் நடத்திய மனைவி லுட்மிலாவை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விவாகரத்து செய்துள்ளார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிபரின் செய்தி தொடர்பாளர் நேற்று  வௌியிட்டுள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும் அவரது மனைவி லுட்மிலாவிற்கும் 2 மகள்கள் உள்ளனர்.

ஏனைய நாட்டு அதிபர், பிரதமர் ஆகியோருடன் அவர்களுடைய மனைவி, பிள்ளைகள் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வது போல், புடினின் மனைவி, மகள்கள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை.

அவர்களைப் பற்றிய செய்திகள் எதுவும் வெளியாவதில்லை. மிகமிக அரிதாகவே புடினின் மனைவி லுட்மிலா பொது நிகழ்ச்சியில் பங்கேற்பார்.
கடந்த 1983ம் ஆண்டு லுட்மிலாவை திருமணம் செய்தார் புடின். அவர் திருமணம் செய்த அதே ஆண்டு பிறந்தவர் அலினா கபாயேவா. இவர் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக பிரபலமானார். கடந்த 2008ம் ஆண்டு அலினாவுக்கு 25 வயதான போது, புடினுடன் இணைத்து பேசப்பட்டார். அலினாவை புடின் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று பரபரப்பாக செய்திகள் வெளியாயின. அதனைப் புடின் மறுத்திருந்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் புடினும் லுட்மிலாவும் தங்களது திருமண வாழ்க்கை முடிந்தது என்று ரஷ்ய தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் பகிரங்கமாக அறிவித்தனர்.

ஆனால், விவாகரத்து முறைப்படி நடக்கவில்லை என்று அதிபரின் கிரம்ளின் மாளிகை அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில், லுட்மியாவை புடின் முறைப்படி விவாகரத்து செய்து விட்டார் என்று நேற்று கிரம்ளின் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்