நேபாளத்தின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான குழு யாழுக்கு விஜயம்

நேபாளத்தின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான குழு யாழுக்கு விஜயம்

நேபாளத்தின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான குழு யாழுக்கு விஜயம்

எழுத்தாளர் Staff Writer

03 Apr, 2014 | 7:10 pm

நேபாளத்தின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான குழுவொன்று இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

யுத்தத்தின் பின்னரான நிலைமைகளை பார்வையிடும் நோக்கில் 9 பேர் அடங்கிய நேபாளத்தின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான குழு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளது.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கத்தைச் சந்தித்து, யாழ் குடாநாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள்கட்டுமானம் தொடர்பில் இந்த குழுவினர் ஆராய்ந்துள்ளனர்.

மீள்குடியேற்றப்பட்ட மக்களின் பிரச்சினைகள் மற்றும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் விடயங்களைக் கேட்டறிந்த நேபாளக் குழுவினர், குடாநாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளனர்.

இதேவேளை சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான நேபாளக் குழுவினர் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறியையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்