நாளையும், நாளை மறுதினமும் கொழும்பில் நீர்வெட்டு

நாளையும், நாளை மறுதினமும் கொழும்பில் நீர்வெட்டு

நாளையும், நாளை மறுதினமும் கொழும்பில் நீர்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

03 Apr, 2014 | 12:46 pm

அத்தியாவசிய திருத்த வேலைகள் காரணமாக நாளையும், நாளை மறுதினமும் கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம் நாளை இரவு 10 மணிமுதல் நாளை மறுதினம் காலை 8 மணிவரை 10 மணித்தியாலத்திற்கு நீர்விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகேகொடை, ஹைலெவல் வீதியின் நுகேகொடை சந்தி முதல் விஜேராம சந்தி வரையிலும், பிட்டகோட்டே, அதுல்கோட்டே, மிரிஹான, உடஹமுல்ல, பாகொட, நாவல, மாதிவெல மற்றும் தலபத்பிட்டிய ஆகிய பகுதிகளுக்கான நீர்விநியோகம் தடைப்படவுள்ளது.

இதேவேளை, இந்த காலப்பகுதிக்குள் மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கெஸ்பேவ நகர சபைப் பிரிவுகளுக்கும் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதுதவிர மட்டக்குளி, கொட்டாஞ்சேனை, முகத்துவாரம், மாதம்பிட்டி, மஹவத்தை, ஜோர்ஜ் ஆர். டி சில்வா மாவத்த மற்றும் கொழும்பு கோட்டை பகுதிகளுக்கும் நாளை இரவு 9 மணிமுதல் நாளை மறுதினம் முற்பகல் 10 மணிவரையான 13 மணித்தியால நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை இரவு 9 மணிமுதல் நாளை மறுதினம் அதிகாலை 5 மணிவரையான 8 மணித்தியால நீர்விநியோகத் தடை இன்னும் சில பகுதிகளுக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஹோகந்தர, அரங்கல சந்தி முதல் வித்தியாலய சந்தி வரையான பகுதி மற்றும் அதனுடன் தொடர்புடைய குறுக்கு வீதிகள், வானகுரு மாவத்தை, மல்வத்தை, புனித கெத்தரின் வத்தை, வித்தியாலய சந்தியில் இருந்து கலல்கொட வீதி வரையான பகுதியிலும், அதனுடன் தொடர்புடைய சகல குறுக்கு வீதிகளிலும் நீர்விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்