நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது இலங்கை; துடுப்பெடுத்தாட தீர்மானம்

நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது இலங்கை; துடுப்பெடுத்தாட தீர்மானம்

நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது இலங்கை; துடுப்பெடுத்தாட தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

03 Apr, 2014 | 6:12 pm

உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முதலாவது அணியை தெரிவு செய்வதற்கான அரையிறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

டாக்காவில் நடைபெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இன்றைய போட்டியில் அணியின் இருபதுக்கு-20 போட்டிகளுக்கான தலைவர் டினேஷ் சந்திமல் இன்றைய போட்டியில் விளையாடவில்லை.

நியூஸிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய அணியே இன்றைய போட்டியில் விளையாடவுள்ளது.

எனினும் திஸர பெரேராவிற்கு பதிலாக சீகுகே பிரசன்ன அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்