துருக்கியில் ட்விட்டர் தடைசெய்யப்பட்டமை சட்டவிரோதமானது – அரசியலமைப்பு நீதிமன்றம்

துருக்கியில் ட்விட்டர் தடைசெய்யப்பட்டமை சட்டவிரோதமானது – அரசியலமைப்பு நீதிமன்றம்

துருக்கியில் ட்விட்டர் தடைசெய்யப்பட்டமை சட்டவிரோதமானது – அரசியலமைப்பு நீதிமன்றம்

எழுத்தாளர் Staff Writer

03 Apr, 2014 | 4:25 pm

துருக்கியில் சமூக இணையத்தளமான ட்விட்டர் தடை செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என அந்த நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

மக்களின் கருத்து வெளியிடும் சுதந்திரம் மற்றும் தனி உரிமைகளை மீறும் வகையில் இந்த தடை அமைந்துள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த தடையை நீக்குமாறு நாட்டின் ஊடக ஒழுங்குபடுத்தும் பிரிவிற்கும் அரசாங்கத்திற்கும் துருக்கி உயர் நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியுள்ளது.

எனினும் இந்த தீர்ப்பின் ஊடாக சமூக இணையத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படுமா என்பது இதுரை தெளிவாக தெரியவரவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ட;விட்டர் இணையத்தளம் ஊடாக அரசாங்த்தின் மீது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் வெளியிடப்பட்டதை அடுத்து அதனை முற்றாக ஒழிப்பதாக துருக்கிப் பிரதமர் கூறியிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்