டேனியெல் ரெக்சிகன் கொலை சம்பவம்; கமலேந்திரன் உள்ளிட்டோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

டேனியெல் ரெக்சிகன் கொலை சம்பவம்; கமலேந்திரன் உள்ளிட்டோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

டேனியெல் ரெக்சிகன் கொலை சம்பவம்; கமலேந்திரன் உள்ளிட்டோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

03 Apr, 2014 | 7:41 pm

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டேனியெல் ரெக்சிகன் கொலை வழக்கின் சந்தேகநபர்கள் மூவரினதும் விளக்கமறியல் மேலும் இரண்டு வாரங்களால் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இன்று ஆஜர்செய்யப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து சந்தேகநபர்களை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவர் டேனியல் ரெக்சிகன், கடந்த வருடம் நவம்பர் மாதம் 26ஆம் திகதி அவரது வீட்டில் இருந்து துப்பாக்கி சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், வட மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன், ரெக்சிகனின் மனைவி மற்றும் சாரதி ஆகியோரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்