சி.வி.விக்னேஸ்வரனின் வாக்குறுதியை அடுத்து யாழ். வர்த்தகர்களின் உண்ணாவிரதம் நிறைவு

சி.வி.விக்னேஸ்வரனின் வாக்குறுதியை அடுத்து யாழ். வர்த்தகர்களின் உண்ணாவிரதம் நிறைவு

சி.வி.விக்னேஸ்வரனின் வாக்குறுதியை அடுத்து யாழ். வர்த்தகர்களின் உண்ணாவிரதம் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

03 Apr, 2014 | 7:22 pm

தமது உரிமைகள் மறுக்கப்படுவதாகத் தெரிவித்து யாழ். வர்த்தகர்கள் இன்று மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்படுள்ளது.

வெளிப் பிரதேச வர்த்தகர்களினால் தமது வியாபாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து யாழ். வர்த்தகர்கள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை இன்று நடத்தினர்.

வெளி மாவட்ட வர்த்தகர்கள் பண்டிகைக் காலங்களில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடமொன்றை வாடகைக்குப் பெற்று, அங்கு வியாபார நடவடிக்கைளை முன்னெடுப்பதாக யாழ். வர்த்தகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தமிழ் தேசியப் பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ். வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம், வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனின் வாக்குறுதியை அடுத்து கைவிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் சார்பாக அவரது செயலாளர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு வாக்குறுதியளித்து, பழச்சாறு வழங்கியதை அடுத்து உண்ணாவிரதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், யாழ் வர்த்தக சங்கத் தலைவர் ஜெயசேகரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்