சிலியில் மீண்டும் சுனாமி எச்சரிக்கை

சிலியில் மீண்டும் சுனாமி எச்சரிக்கை

சிலியில் மீண்டும் சுனாமி எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

03 Apr, 2014 | 12:05 pm

சிலியின் வடபிராந்தியத்தில் மீண்டும் ஆழிப் பேரலை அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

7.6 ரிக்டர் அளவில் மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டுள்ள நிலையில் சிலி அதிகாரிகள் இந்த அறிவித்தை விடுத்துள்ளனர்.

நேற்றைய தினம் சிலியில் உணரப்பட்ட 8.2 ரிக்டர் அளவான நிலநடுக்கத்தை அடுத்து ஏற்பட்ட ஆழிப் பேரலை காரணமாக 6 பேர் பலியாகியிருந்தனர்.

அத்துடன் 2600 வீடுகள் அழிவடைந்துள்ளதுடன், பாரிய அளவில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிருந்தமை குறிப்பிடதக்கது

இந்த நிலையில் மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டுள்ள நிலையில். சிலி மற்றும் பெரு ஆகிய நாடுகளில் ஆழிப் பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கரையோரப்பகுதிகளிலுள்ள ஆயிரக்கணக்கான மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்