சர்ச்சையில் முடிந்த வடக்கின் பெருஞ் சமரில் சென்.ஜோன்ஸ் வெற்றிபெற்றதாக அறிவிப்பு

சர்ச்சையில் முடிந்த வடக்கின் பெருஞ் சமரில் சென்.ஜோன்ஸ் வெற்றிபெற்றதாக அறிவிப்பு

சர்ச்சையில் முடிந்த வடக்கின் பெருஞ் சமரில் சென்.ஜோன்ஸ் வெற்றிபெற்றதாக அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Apr, 2014 | 9:06 pm

கடந்த மாதத்தில் முடிவின்றி கைவிடப்பட்ட 108ஆவது வடக்கின் பெருஞ் சமரில் சென்.ஜோன்ஸ் அணி வெற்றி பெற்றதாக இன்று பிற்பகல் அறிவிக்கப்பட்டது.

யாழ். மத்திய மற்றும் சென். ஜோன்ஸ் கல்லூரிகளின் அதிபர்கள் தலைமையில் இன்று நடைபெற்ற சந்திப்பில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

108ஆவது வடக்கின் பெருஞ் சமர் யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இம்முறை நடைபெற்றதுடன் போட்டியில் சென். ஜோன்ஸ் அணியின் வெற்றி இலக்கு 135 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த இலக்கை நோக்கி இரண்டாம் இனிங்ஸில் பதிலளித்தாடிய சென். ஜோன்ஸ் அணியின் மூன்றாவது விக்கெட் வீழ்த்தப்பட்ட போது மைதானத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.

மூன்றாவதாக வழங்கப்பட்ட ஆட்டமிழப்பில் நடுவரின் தீர்ப்பு தவறு என ரசிகர்கள் நினைத்தால் இந்த அமைதியின்மை உருவானது.

அதன் பிறகு போட்டி கைவிடப்பட்டதுடன் இரு கல்லூரி அணிகளுக்கு இடையில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள ஒருநாள் போட்டி தொடர்பான சந்திப்பு அதிபர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன்போது கைவிடப்பட்ட 108 ஆவது பெருஞ் சமரில் சென். ஜோன்ஸ் அணி வெற்றிதாக தீர்மானிக்கப்பட்டதென்றும்  அறிவிக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்