ஓரினச்சேர்க்கை விவகாரம்: மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது இந்திய உச்ச நீதிமன்றம்

ஓரினச்சேர்க்கை விவகாரம்: மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது இந்திய உச்ச நீதிமன்றம்

ஓரினச்சேர்க்கை விவகாரம்: மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது இந்திய உச்ச நீதிமன்றம்

எழுத்தாளர் Bella Dalima

03 Apr, 2014 | 3:42 pm

ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குற்றச்செயல் என்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேன்முறையீட்டு மனுவை பகிரங்கமாக விசாரிக்க இந்திய உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமற்ற செயல் என்று டெல்லி உயர் நீதிமன்றம் 2009 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் திகதி தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து பல்வேறு சமூக, மத அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது சட்டப்படி குற்றத்துக்குரிய செயல் என்று கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

இந்திய தண்டனைச் சட்டம் 377 ஆவது பிரிவின்படி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்க இந்தச் சட்டம் வகை செய்கிறது என நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்திருந்தனர்.

இத்தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக்கோரி, ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவான நாஸ் அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தன.

அதில், ஓரினச்சேர்க்கை குற்றம் என்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் தவறு இருப்பதாகவும், இதுகுறித்த நீதிமன்றத்தில் பகிரங்க விசாரணை தேவை என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு, மேன்முறையீட்டு மனுவை பகிரங்கமாக விசாரிக்கக் கோரிய மனுவை ஏற்றுக்கொண்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்