உலகப் பொருளாதாரம் பலவீனமடையலாம் – கிறிஸ்டின் லகாட்

உலகப் பொருளாதாரம் பலவீனமடையலாம் – கிறிஸ்டின் லகாட்

உலகப் பொருளாதாரம் பலவீனமடையலாம் – கிறிஸ்டின் லகாட்

எழுத்தாளர் Staff Writer

03 Apr, 2014 | 4:32 pm

உலகப் பொருளாதாரம் பலவீனமடையலாம் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகாட் எச்சரித்துள்ளார்.

துணிகரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத விடத்து வளர்ச்சி குறைவடையும் என அவர் கூறியுள்ளார்.

உலக பொருளாதாரம் இவ்வாண்டும், அடுத்த ஆண்டும் 3 வீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை பதவு செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தையில் காணப்படும் ஏற்ற இறக்கம் மற்றும் யுக்ரைய்ன் ஏற்படுத்தியுள்ள ஆபத்துக்கள் தொடர்பான பதற்றம் என்பன பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என கிறிஸ்டின் லெகாட் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் ஐரோப்பிய வலயத்தில் காணப்படும் பணவீக்கத்தை கட்டுப்படுத்துற்கு  மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

வழமைக்கு மாறான நடவடிக்கை உள்ளிட்ட மேலதிக நிதி தளர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என ஐரோப்பிய மத்திய வங்கியை, சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கோரியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்