அவுஸ்திரேலியா செல்ல முயன்றவர்கள் அந்தமானில் அகப்பட்டனர்

அவுஸ்திரேலியா செல்ல முயன்றவர்கள் அந்தமானில் அகப்பட்டனர்

அவுஸ்திரேலியா செல்ல முயன்றவர்கள் அந்தமானில் அகப்பட்டனர்

எழுத்தாளர் Bella Dalima

03 Apr, 2014 | 4:38 pm

அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக படகில் செல்ல முயன்ற இலங்கைத் தமிழர்கள் 26 பேர், அந்தமான் கடற்கரை பகுதியில், இந்தியக் கடலோர காவல்படையினரிடம் பிடிபட்டனர்.

அவர்களிடம் அவுஸ்திரேலியா செல்வதற்கான உரிய சட்ட ஆவணங்கள் எதுவும் இல்லாததால், அனைவரையும் அந்தமான் பொலிஸாரிடம் இந்திய கடலோரக் காவல்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
பின்னர், 26 பேரும், தனியார் விமானம் ஒன்றின் மூலமாக, இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையர்களிடம் இந்திய பொலிஸார் நடத்திய விசாரணையில், அவுஸ்திரேலியாவிற்கு வேலை தேடிச் செல்வதாகவும், இதற்காக, படகோட்டியிடம் பல இலட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக தங்கள் நாட்டிற்கு வருபவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்படமாட்டாது என அவுஸ்திரேலியா ஏற்கனவே எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்